UPDATED : அக் 28, 2025 07:44 AM
ADDED : அக் 28, 2025 08:13 AM
சிவகங்கை:
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொழிற்கல்வி படிக்கும் தங்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை பெற விரும்பினால் நவ.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியில் இருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2025-26ம் கல்வியாண்டுக்கான படிப்பு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த கல்வி உதவித்தொகை கோரும் ஆசிரியர்களின் ஆண்டு வருமானம் ரூ.7.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் பிள்ளைகள் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனத்தில் தொழிற்கல்வி படிப்புகளை பயில்பவர்களாக இருக்க வேண்டும். தங்கள் பணி மற்றும் ஊதிய விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
ஓய்வு பெற்ற மற்றும் இறந்துபோன ஆசிரியர்களின் பிள்ளைகளும் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை முதன்மை கல்வி அலுவலர் மூலம் நவ.10க்குள் பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

