தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாளை மாணவர்களுக்கு விடுமுறை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு

நாளை மாணவர்களுக்கு விடுமுறை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு

நாளை மாணவர்களுக்கு விடுமுறை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு


UPDATED : ஏப் 14, 2026 06:11 PM

ADDED : ஏப் 14, 2026 06:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 14, 2026 06:11 PM ADDED : ஏப் 14, 2026 06:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:
நாளை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவடைந்த நிலையில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு தேர்வு நடந்து வருகின்றன.

ஏப்., 16ல், அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு நிறைவு பெறுகின்றன. நாளை தேர்வு இல்லாத நிலையில், மாணவ, மாணவியருக்கு பள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, நாளை இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற உள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக பள்ளிக்கு விடுமுறை என ஆசிரியர்கள் நம்பியிருந்தனர்.

ஆனால், தேர்தல் பயிற்சிக்கு செல்லாத ஆசிரியர்கள், நாளை காலை முதல், மாலை வரை பள்ளியில் இருக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us