UPDATED : மார் 18, 2026 05:29 AM
ADDED : மார் 18, 2026 05:29 PM

அ நிறம் | அளவு
தேவிபட்டினம்:
தேவிபட்டினம் அருகே பனைக்குளம் பகுர்தீன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி எட்டாவது செஸ் போட்டி துவக்க விழா நடந்தது.
மண்டபம் வட்டார கல்வி அலுவலர் பாலாமணி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை முத்துமாரி முன்னிலை வகித்தார். ஆசிரியர் மணிகண்டன் தொகுத்து வழங்கினார்.
மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் புதிதாக சேர்ந்த 40 மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிரியர் மைக்கேல் மரியதாஸ் உட்பட பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
