UPDATED : ஆக 02, 2024 12:00 AM
ADDED : ஆக 02, 2024 10:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்:
அனைத்து அரசு பள்ளிகளிலும், பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் இன்று நடக்கிறது.
இதில், வரவேற்புரை மற்றும் கூட்டத்தின் நோக்கம், தமிழக முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரின் வாழ்த்து செய்தி காணொளிகள் திரையிடல், பள்ளி மேலாண்மை குழு மற்றும் பணிகள் பகிர்வு, பள்ளி மேலாண்மை குழுவின் இரண்டு ஆண்டு பணிகள் அறிக்கை வாசிப்பு, பணி நிறைவு செய்த உறுப்பினர்களுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து, அரசாணை வழிகாட்டு நெறிமுறை, ஆகியவை குறித்து காணொளி திரையிடப்படுகிறது. தொடர்ந்து, கேள்வியும், பதிலும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.