கல்லுாரி தேர்வு விடைத்தாள் ஏற்றி வந்த கார்-வேன் மோதி விபத்து;- 7பேர் காயம்
கல்லுாரி தேர்வு விடைத்தாள் ஏற்றி வந்த கார்-வேன் மோதி விபத்து;- 7பேர் காயம்
UPDATED : ஆக 02, 2024 12:00 AM
ADDED : ஆக 02, 2024 10:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி:
கோபால்பட்டியில் கல்லுாரி மாணவர்கள் விடைத்தாள் ஏற்றி வந்த காரும்- வேனும் மோதியதில் வேன் கவிழ்ந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.
நத்தம் அருகே கன்னியாபுரம் பகுதி தனியாருக்கு சொந்தமான மில் வேன் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு நத்தம் நோக்கி வந்தது.
கோபால்பட்டி வடுகபட்டி பிரிவு சாலையில் வந்த போது, எதிரே நத்தத்திலிருந்து திண்டுக்கல் பழநி சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை நோக்கி தனியார் கல்லுாரி மாணவர்கள் தேர்வு விடைத்தாள்களை ஏற்றி வந்த கார் வந்தது. கட்டுப்பாட்டை இழந்த வேன் கார் மீது மோதியது. இதில் வேன் கவிழ்ந்தது . இதில் காரை ஓட்டி வந்த ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த டிரைவர் முனீஸ்வரன் 34, உட்பட வேனில் பயணம் செய்த 6 பேர் காயமடைந்தனர்.