பள்ளியில் அறிவியல் கண்காட்சி: மாணவர் படைப்புகள் அசத்தல்
பள்ளியில் அறிவியல் கண்காட்சி: மாணவர் படைப்புகள் அசத்தல்
UPDATED : அக் 14, 2026 05:44 PM
ADDED : அக் 14, 2026 05:45 PM
அ நிறம் | அளவு
உடுமலை:
கோமங்கலம்புதூர் வித்ய நேத்ரா மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது.
இக்கண்காட்சியில் மழலையர் பிரிவு முதல், மேல்நிலை பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் வரை பங்கேற்று, தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில், அறிவியல் படைப்புகளை கண்காட்சிக்கு வைத்திருந்தனர்.
பள்ளியின் முதல்வர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்களிடம், அறிவியல் புதுமைகளில் அமைந்த செயல் பொருட்களையும், அதன் செயல்முறை விளக்கத்தையும் மாணவர்கள் வழங்கினர்.
அறிவியல் செய்முறை விளக்கத்தை அளித்த மாணவர்களை, பள்ளித்தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
