போக்குவரத்து போலீசாருக்கு பள்ளி மாணவர்கள் குளிர்பானம்
போக்குவரத்து போலீசாருக்கு பள்ளி மாணவர்கள் குளிர்பானம்
UPDATED : ஏப் 18, 2025 12:00 AM
ADDED : ஏப் 18, 2025 09:15 AM
மேட்டுப்பாளையம்:
வெயிலில் நிற்கும் போக்குவரத்து போலீசாருக்கு, அரசு பள்ளி மாணவர்கள் குளிர்பானங்களை வழங்கினர்.
மேட்டுப்பாளையத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்ப காற்று, அனல் காற்றாக வீசி வருகிறது.
கடும் வெப்பத்துக்கு இடையே மேட்டுப்பாளையம் நகரில், போலீசார், வாகன போக்குவரத்தை சீர் செய்யும், பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு மேட்டுப்பாளையம் வள்ளுவர் நகரவை துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் குளிர்பானங்களை வழங்கினர்.
பஸ் ஸ்டாண்ட் அருகே, 5 சாலைகள் சந்திக்கும் இடத்தில், போக்குவரத்து பணிகளில் ஈடுபட்ட போலீசாருக்கு, மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னகாமணன், குளிர்பானங்களை வழங்கி துவக்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகள் போக்குவரத்து போலீசாருக்கு ரோஜாப்பூ கொடுத்து, மோர் மற்றும் குளிர் பானங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சத்தீஷ் பாபு, பள்ளி தலைமை ஆசிரியை பேபி எஸ்தர், நகராட்சி ஊழியர் ஜெயராமன் உட்பட போக்குவரத்து போலீசார் பங்கேற்றனர்.