UPDATED : ஆக 23, 2024 12:00 AM
ADDED : ஆக 23, 2024 08:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், மன்ற செயல்பாடுகள், நுால் வாசிப்பு, நுண்கலைகள், விளையாட்டு, அறிவியல் போன்ற பிரிவுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை, மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, இந்தாண்டுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றோரில், 20 மாணவர்கள், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மற்றும் ஒரு அலுவலர் என, 22 பேர் நேற்று ஹாங்காங்கிற்கு கல்வி சுற்றுலா அனுப்பப்பட்டனர்.