UPDATED : ஜன 13, 2026 08:27 PM
ADDED : ஜன 13, 2026 08:32 PM

சின்னாளபட்டி: மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த தேசிய துப்பாக்கி சுடுதலில் சின்னாளபட்டி மாணவி வெள்ளி பதக்கம் வென்றார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஜன. 5 முதல் 9 வரை தேசிய துப்பாக்கி சூடுதல் போட்டி நடந்தது. தமிழக அணியின் சார்பில் விளையாட மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே உள்ள பயிற்சி மையம் மூலம் நடந்த தேர்வில் சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவியர் 3 பேர் பங்கேற்றனர்.
எட்டாம் வகுப்பு மாணவி ஹரிஷா இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். இதற்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. மாநில ஹேண்ட்பால் கழக செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் திலகம் முன்னிலை வகித்தார். மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி மேலாளர் பாரதிராஜா, அறக்கட்டளை அறங்காவலர்கள் ஆல்பிரட்யங், அபிஷேக், உதவி தலைமை ஆசிரியர் வெண்ணிலா பங்கேற்றனர்.

