தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/50 ஆண்டுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

50 ஆண்டுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

50 ஆண்டுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்


UPDATED : ஜன 13, 2026 08:32 PM

ADDED : ஜன 13, 2026 08:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2026 08:32 PM ADDED : ஜன 13, 2026 08:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம்: வேம்பார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிணைந்து ஆசிரியரிடம் ஆசி பெற்று, பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வேம்பார்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் 1974 - 95ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 50 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் நடந்தது. இதில் சிலர் அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். பலர் விவசாயியாகவும், வியாபாரிகளாகவும் உள்ளனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் 50க்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாணவரும் தற்போதைய பள்ளி தலைமை ஆசிரியருமான தனராஜன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் பிரதாப் சிங் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருக்குறள் பேரவையின் செயலாளர் ராமசாமி, உலக தமிழ் சங்க இயக்குனர் சந்திரா கலந்து கொண்டனர். முன்னாள் ஆசிரியர்களை மாணவர்கள் கவுரவித்தனர். வயதான ஆசிரியரிடம் ஆசி பெற்றனர். பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். பள்ளி நலன், வளர்ச்சியில் முன்னாள் மாணவர்கள் செயல்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us