UPDATED : ஜன 13, 2026 08:35 PM
ADDED : ஜன 13, 2026 08:36 PM
திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லூரியில், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின், தென் பிராந்திய மையம், ஹைதராபாத் அமைப்பு சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை கல்லூரியின் கூட்ட அரங்கில் 3 நாள் நடந்தது.
கலைக்கல்லூரி முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் ஸ்ரீ வேணி தேவி வரவேற்றார். கல்லூரி தாளாளர் ரத்தினம் துவக்க உரையாற்றினார்.
ஓஸ்மானியா பல்கலை சமூக அறிவியல் துறைப்பேராசிரியர் சுதாகர்ரெட்டி, கல்லுாரி இயக்குநர் துரை ரத்தினம், கல்வி இயக்குநர் மார்க்கண்டேயன், ஆலோசகர் ராமசாமி, துணை முதல்வர் இன்பலட்சுமி, சுய உதவிப்பிரிவின் துணை முதல்வர் நடராஜன், மதர் தெரசா பெண்கள் பல்கலை துறைத்தலைவர் உஷா ராஜா நந்தினி, பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் பாலசுப்ரமணி, செந்தில்நாதன், மதுரை காமராஜர் பல்கலை இணைப்பேராசிரியர் முத்துப்பாண்டி, திருச்சி துாய வளனார் கல்லுாரி உதவிப்பேராசிரியர் ஜூட் நிர்மல், காந்திக்கிராம பல்கலை பேராசிரியர் சண்முகவடிவு பேசினர். பயிற்சிப் பட்டறை இயக்குநர் முருகானந்தம் நன்றி கூறினார்.

