UPDATED : ஜன 13, 2026 08:36 PM
ADDED : ஜன 13, 2026 08:38 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் சார்பில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லுாரியில், வரும் 24ம் தேதி நடக்கிறது.
அன்று கலை, 8:30 மணி முதல் மாலை, 3:00 மணி வரை நடைபெறும் முகாமில், 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனத்தினர் பங்கேற்று, தேவையான பணியாளர்களை தேர்வு செய்கின்றனர்.
எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ்2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், தொழிற்கல்வி முடித்தோர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், டிரைவர், தையல் பயிற்சி பெற்றோர் என அனைத்து கல்வித்தகுதியுள்ள வேலை தேடுவோரும் பங்கேற்கலாம்.
முகாமில் பங்கேற்று, தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறுவதால், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. மேலும் விவரங்களுக்கு, 94990 55944 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முகாமில் பங்கேற்கும் நிறுவனத்தினரும், வேலை தேடுவோரும், www.tnprivatejobs.gov.in என்கிற தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.

