UPDATED : அக் 13, 2026 09:35 PM
ADDED : அக் 13, 2026 09:37 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
கரசூர் பகத்சிங் அரசு துவக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளியில் நடந்த கண்காட்சியை, பள்ளித்துணை ஆய்வாளர் வட்டம் 5 புவியரசன் துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பா ஆரோக்கியமேரி வரவேற்றார். மாணவர்கள், 80க்கும் மேற்பட்ட அறிவியில் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
நடுவர்கள் மூலம் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் ஜெராட், சுதா, கவிதா, சிவகாமசுந்தரி, சண்முகப்பிரியா, பெற்றோர்கள், பள்ளி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
