UPDATED : அக் 02, 2025 09:32 AM
ADDED : அக் 02, 2025 09:33 AM
திருப்பூர்:
ஆண்டுதோறும், அக்., 4 முதல், 10 வரை சர்வதேச விண்வெளி வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் இணைந்து, அந்தியூரிலுள்ள கமலம் கலை அறிவியல் கல்லுாரியில், வரும், 4ம் தேதி, மாணவர்களுக்கான அறிவியல் திறனறி போட்டிகளை நடத்தவுள்ளன.
இதுதவிர, இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், இணைய வழி கருத்தரங்கு ஆகியவையும் நடத்தப்பட உள்ளன. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு 'இஸ்ரோ'வின் சான்றிதழ் வழங்கப்படும். வெற்றி பெறுவோருக்கு இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அறிவியல் களப்பயணம் அழைத்துச் செல்லப்படவும் உள்ளனர். தகவல் தேவைப்படுவோர், 87782 01926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கலிலியோ அறிவியல் கழக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.