டாக்டர்களுக்கு ஏ.ஐ. மாற்றாகாது: பி.எஸ்.ஜி. விழாவில் பேச்சு
டாக்டர்களுக்கு ஏ.ஐ. மாற்றாகாது: பி.எஸ்.ஜி. விழாவில் பேச்சு
UPDATED : அக் 02, 2025 09:32 AM
ADDED : அக் 02, 2025 09:32 AM
கோவை:
பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் தின விழா, கல்லுாரி அரங்கில் நேற்று நடந்தது. கேரளா ராஜகிரி மருத்துவமனை குடல் நோய் மேம்பாட்டு மைய இயக்குனர் பிலிப் அகஸ்டின், முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
மருத்துவ உலகில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள், புதிய சவால்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும். வாய்ப்புகள் சவால்கள் நிறைந்தும், புதிதாகவும் இருக்கும்.
ஏ.ஐ., தொழில்நுட்பம், டாக்டர்களுக்கு மாற்றாக அமையாது. என்றாலும், ஏ.ஐ., தொழில்நுட்பங்கள் நம்முடன் ஒருங்கிணைந்து பயணிக்கும். அதை தவிர்க்காமல், கற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
கடந்த காலங்களில், புத்தகங்களும், நோட்டும் துணையாக இருந்தன. தற்போது, உள்ளங்கையில் உலகம் இருப்பதுபோல் வாய்ப்புகள் பரந்து விரிந்துள்ளன. அதை பயன்படுத்த தயாராக இருப்பவர்கள் துறையில் நிலைத்திட முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
முன்னாள் மாணவர்கள் நான்கு பேருக்கு, விருது வழங்கப்பட்டது. பி.எஸ்.ஜி. அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், கல்லுாரி முதல்வர் சுப்பராவ், பி.எஸ்.ஜி. மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரி கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.