UPDATED : நவ 02, 2024 12:00 AM
ADDED : நவ 02, 2024 10:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்:
மயிலம் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் அறிவியல் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு அரசின் அறிவியல் இதழான துளிரை தலைமையாசிரியர் தண்டபாணி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் கோவிந்தன், அம்ரோஸ், ரேக்கா முன்னிலைவகித்தனர். பட்டதாரி ஆசிரியர் ஜெயராஜ் பிரபு வரவேற்றார்.
துளிர் அறிவியல் இதழில் ஏராளமான குறுஞ்செய்திகளும் கட்டுரைகளும் வருகிறது இவற்றை மாணவர்கள் படித்தால் அறிவியல் சம்பந்தமான அனைத்து செய்திகளையும் அறிய முடியும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதில் பள்ளியின் ஜெயராமன், புருஷோத்தமன், ஆய்வாக உதவியாளர் குமரவேல், மற்றும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.