முதுநிலை மருத்துவ கவுன்சிலிங் 216 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு
முதுநிலை மருத்துவ கவுன்சிலிங் 216 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு
UPDATED : டிச 24, 2024 12:00 AM
ADDED : டிச 24, 2024 10:32 AM

புதுச்சேரி :
எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ இடங்களுக்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தி சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை அரசு மருத்துவ கல்லுாரியில் 26 பேருக்கும், பிம்ஸ் மருத்துவ கல்லுாரி-27, மணக்குள விநாயகர்-53, வெங்கடேஸ்வரா-58, என, 164 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிர்வாக இடங்களை பொருத்தவரை, பிம்ஸ் மருத்துவ கல்லுாரி-2, மணக்குள விநாயகர்-47, வெங்கடேஸ்வரா-3 என, 52 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
சீட் கிடைத்த மாணவர்கள் தங்களுக்கான சேர்க்கை கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சீட் கல்லுாரியில் வரும் 23ம் தேதி முதல் 28 ம்தேதி மாலை 5 மணி வரை அனைத்து அசல் சான்றிதழ்களுடன் சேர வேண்டும். மேலும், சந்தேகங்களுக்கு 0413-2655570 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.