முதுநிலை மருத்துவ படிப்பிற்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங்
முதுநிலை மருத்துவ படிப்பிற்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங்
UPDATED : ஜூலை 29, 2025 12:00 AM
ADDED : ஜூலை 29, 2025 09:26 AM

புதுச்சேரி:
எம்.டி.எஸ்., பல் மருத்துவ படிப்பிற்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தி, சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஒதுக்கீட்டினை பொருத்தவரை, மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரியில் 9 பேர், மாகி பல் மருத்துவ கல்லுாரியில் 7 பேர், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் 7 என 23 மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிர்வாக இடங்களை பொருத்தவரை மாகி பல் மருத்துவ கல்லுாரியில் 5 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. சீட் கிடைத்த மாணவர்கள் தங்களுடைய லாகின் மூலம் டேஷ்போர்டு வாயிலாக உள்ளே நுழைந்து மாணவர் சேர்க்கை கடிதத்தை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
சீட் கிடைத்த மாணவர்கள் வரும் 1ம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கல்லுாரியில் சேர வேண்டும். இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் சீட் கிடைக்காத மாணவர்களுக்கு அவர்கள் கட்டிய பணம் திரும்ப கிடைக்கும். ஆனால் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் சீட் ஒதுக்கப்பட்டு, கல்லுாரியில் சேரவில்லையெனில், அம்மாணவர்களுக்கு பதிவு கட்டணம் திருப்பி கிடைக்காது.
கூடுதல் தகவல்களுக்கு 0413-2655570 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சென்டாக் அறிவித்துள்ளது.