UPDATED : ஜன 13, 2026 08:50 PM
ADDED : ஜன 13, 2026 08:55 PM

கமுதி: சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக கமுதி பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஜெகதீஸ்வரி, திருமுருகன் தேர்வாகி உள்ளனர்.
கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டத்தில் மாணவர்கள் பலர் உள்ளனர். சென்னையில் ஜன., 26ல் நடக்கும் குடியரசு தின விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் அணிவகுப்பு நடைபெறும்.
இதில் காரைக்குடி அழகப்பா பல்கலை சார்பில் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஜெகதீஸ்வரி, திருமுருகன் கலந்து கொள்வதற்கு தேர்வாகியுள்ளனர்.
மாணவர்களை திட்ட அலுவலர் கஜேந்திரநாயகம், முதல்வர் தர்மர், பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

