UPDATED : பிப் 15, 2026 11:02 AM
ADDED : பிப் 15, 2026 11:04 AM
காஞ்சிபுரம்:
பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியின் நாட்டுநல பணி திட்ட முகாமில், குழந்தைகள் பாதுகாப்பு, உரிமை பற்றி கருத்தரங்கம் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி மாணவர்கள், 80க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் நாட்டு நலப்பணி திட்ட முகாம், கடந்த 9ம் தேதி துவங்கி, இன்று முடிகிறது.
முகாமில் பங்கேற்ற மாணவர்கள், பல்வேறு சமுதாய பணிகளை செய்து வருகின்றனர். இதற் கிடையே, அரசு திட்ட செயல்பாடுகள், விழிப்புணர்வுகள் பற்றிய கருத்தரங்கம் நடப்பது வழக்கம்.
அந்த வகையில், ஏரிவாய் கிராமத்தில் நடந்த நாட்டு நலப்பணி திட்ட முகாம் இடையே, நேற்று குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பற்றிய கருத்தரங்கம் மாணவர்கள் மத்தியில் நடந்தது.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் யசோதரன், ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவன முதன்மை மேலாளர் கிருபாகரன் ஆகியோர், குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி மாணவர்களிடம் பேசினர். போக்சோ சட்டம், குழந்தைகள் உரிமை, சிறுவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என, பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர்.

