UPDATED : பிப் 15, 2026 11:04 AM
ADDED : பிப் 15, 2026 11:06 AM

மதுரை:
மதுரை தனக்கன்குளம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் மாணவர்களின் கலை கண்காட்சி 'அவுரா 2026' தலைப்பில் நடந்தது.
இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களின் ஓவியங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விளக்க படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சிறப்பு விருந்தினர் பள்ளித் தலைவர் வடிவேலு கண்காட்சியை துவக்கி வைத்தார்.
பள்ளி முதல்வர் ராமலட்சுமி தலைமை வகித்தார். சைசா நிறுவன தலைமை செயல் அதிகாரி விஜய், தலைவர் சரண், கல்வித் தலைவர் முகமது ஹசன், மேலாளர் முத்துக் குமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முதல்வர் ராமலட்சுமி கூறுகையில், “மாணவர் களின் படைப்பாற்றல், கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் கண்காட்சி நடத்தப்பட்டது. கே.ஜி., முதல் 11ம் வகுப்பு வரை பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் அவர்களது படம், கண்காட்சி படைப்புடன் கூடிய காலண்டர் பரிசாக வழங்கப்பட்டது. இது போன்ற கண்காட்சி தொடர்ந்து நடத்தப்படும்” என்றார்.

