சிவில் சர்வீசஸ் தேர்வு குறித்து ஆர்,டி., கல்லுாரியில் கருத்தரங்கு
சிவில் சர்வீசஸ் தேர்வு குறித்து ஆர்,டி., கல்லுாரியில் கருத்தரங்கு
UPDATED : நவ 29, 2026 12:39 PM
ADDED : நவ 29, 2026 12:40 PM
பெருந்துறை:
சென்னை அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையம், பெருந்துறை விஜயமங்கலம் ஆர்.டி.காலேஜ் ஆப் காமர்ஸ் மற்றும் புரோபஷனல் ஸ்டெடி கல்லுாரி இணைந்து, பள்ளி மாணவ மாணவிகளுக்கு, சிவில் சர்வீஸ் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தினர். கல்லுாரி தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக சென்னை அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மைய முதல்வர் சரவணன், கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். கருத்தரங்கில் ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை என நான்கு மாவட்டங்களை சேர்ந்த, 60 பள்ளிகளிலிருந்து, 1,500 மாணவ மாணவியர், தாளாளர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, அகில இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வில், 18-வது இடம் பெற்ற ஸ்ருதி, தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
நிகழ்வில் மாணவர்களின் சந்தேகங்களுக்கு சிறப்பு விருந்தினர்களான சரவணன், ஸ்ருதி இருவரும் விளக்கம் அளித்தனர். கல்லுாரி பேராசிரியர் திவ்யதர்சினி நன்றி கூறினார்.
