வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்த கருத்தரங்கம்
வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்த கருத்தரங்கம்
UPDATED : ஜூலை 04, 2026 11:48 AM
ADDED : ஜூலை 04, 2026 11:49 AM
திருப்பூர்:
கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுததிகளில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், அரசு மானியத்துடன் கூடிய சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
திருப்பூரில் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், மாவட்ட தொழில்மையம் வாயிலாக, கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. 7ம் தேதி காலை, 10:30 மணி முதல் 12:30 மணி வரை, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்; மதியம், 02:30 மணி முதல் மாலை, 04:30 மணி வரை, போடிப்பட்டியில் ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
வரும், 9ம் தேதி காலை, 10:30 முதல் 12:30 மணி வரை, பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்; மதியம், 02:30 முதல் மாலை, 4:30 மணி வரை, பொங்கலுார் ஒன்றிய அலுவலகத்தில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. கருத்தரங்கில், சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் கடன் திட்டங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மானிய திட்டங்கள், உத்யம் பதிவு, ஜெம் பதிவு, ஒற்றைச்சாளர முறை தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட உள்ளது. வேலைவாய்ப்பற்ற, தொழில் துவங்க விருப்பமுள்ள இளைஞர்கள், வட்டார அளவிலான விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்க மாவட்ட தொழில் மையம் அழைப்புவிடுத்துள்ளது.
