UPDATED : அக் 06, 2024 12:00 AM
ADDED : அக் 06, 2024 09:41 AM

சென்னை:
ஷிவ் நாடார் பவுண்டேஷனின் புதிய முன்னெடுப்பு நடவடிக்கையான ஷிவ் நாடார் ஸ்கூல் ஆ.ப் லா, சென்னையில் அமைந்துள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி சுந்தரேஷ் தலைமை விருந்தினராக பங்கேற்றார். சென்னை - ஷிவ் நாடார் பல்லைக்கழகத்தின் துணை வேந்தர், பேராசிரியர் பட்டாச்சார்யா, ஷிவ் நாடார் பவுண்டேஷன் அறங்காவலர் ஷிகர் மல்ஹோத்ரா, ஷிவ் நாடார் ஸ்கூல் ஆப் லா - ன் டீன் ஷிவ் சுவாமிநாதன் மற்றும் இதன் இணை டீன் வினய் சீத்தாபதி, ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
சென்னை - ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ஸ்ரீமன் குமார் பட்டாச்சார்யா கூறுகையில், இந்திய பார் கவுன்சில் - ன் அங்கீகாரம் பெற்ற ஷிவ் நாடார் ஸ்கூல் ஆப் லா, 5 ஆண்டுகள் காலஅளவு கொண்ட பிஏ.எல்எல்பி கல்வித்திட்டத்தை வழங்குகிறது. இக்கல்வித்திட்டத்திற்கான தொடக்க பேட்சில் 45 மாணவர்கள் இணைந்திருக்கின்றனர். அடுத்த ஆண்டிற்கு 120 மாணவர்கள் இடம்பெறுகின்ற பேட்சை கொண்டிருக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. பல மாணவர்களுக்கு, முழுமையான கல்விக்கட்டண தள்ளுபடி உட்பட, ஸ்காலர்ஷிப் திட்டம் வழங்கப்பட்டிருக்கிறது, என்றார்.
ஷிவ் நாடார் பள்ளியின் தலைவரும், ஷிவ் நாடார் பவுண்டேஷனின் அறங்காவலருமான திரு. ஷிகர் மல்ஹோத்ரா கூறுகையில், ஷிவ் நாடார் பவுண்டேஷன் இந்தியாவில் கல்விக்காக ரூ.7600 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்திருக்கிறது. இங்கு பணிபுரியவிருக்கும் ஆசிரியர்கள் 20 சதவீதம் பேர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சட்டத்துறையில் பிரபலமாக பணியாற்றுபவர்களாக இருப்பார்கள், என்றார்.