அமெரிக்கா புளோரிடா பல்கலை.யில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி
அமெரிக்கா புளோரிடா பல்கலை.யில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி
UPDATED : ஏப் 18, 2025 12:00 AM
ADDED : ஏப் 18, 2025 01:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளோரிடா:
அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலை.யில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவர் பலியாயினர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் புளோரிடா ஸ்டேட் பல்கலை. உள்ளது. இங்குள்ள வாளாகத்தில் நேற்று திடீரென துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் இரண்டு பேர் பலியாயினர். 6 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.,யும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.