தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அங்கன்வாடி குழந்தைகளுக்கும் அரசு கேக் வழங்கியிருக்கலாம்

அங்கன்வாடி குழந்தைகளுக்கும் அரசு கேக் வழங்கியிருக்கலாம்

அங்கன்வாடி குழந்தைகளுக்கும் அரசு கேக் வழங்கியிருக்கலாம்


UPDATED : நவ 14, 2026 01:48 PM

ADDED : நவ 14, 2026 01:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 01:48 PM ADDED : நவ 14, 2026 01:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்:
அன்னூர் வட்டாரத்தில் பெரும்பாலான துவக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இம்மையங்களில் 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகள் சத்துணவு சாப்பிட்டு, கல்வி கற்கின்றனர். பள்ளிகளில் வழங்கப்பட்ட கேக், அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை.

அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில், 'துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் பள்ளி மாணவ, மாணவியருக்கு மட்டும், கேக் வழங்கினர். ஆனால் அங்கன்வாடி மையங்களில் படிக்கும் எங்கள் குழந்தைகளுக்கு கேக் வழங்கவில்லை.

சர்க்கரை பொங்கல் மட்டும் வழங்கப்பட்டது. இதனால் அங்கன்வாடி குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியரை ஏக்கத்துடன் பார்த்தனர்.

கேக் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகளுக்கும் கேக் வழங்கி இருக்கலாம்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us