தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாசிப்பில் 45 நிமிடங்கள் மூழ்கிய 1,427 மாணவர்கள் 'ஸ்பிரிபீல்டு' மெட்ரிக்பள்ளியின் வித்தியாசமான முயற்சி: தினமலர் 'பட்டம்' இதழை ஆர்வத்துடன் வாசித்த மாணவர்கள்

வாசிப்பில் 45 நிமிடங்கள் மூழ்கிய 1,427 மாணவர்கள் 'ஸ்பிரிபீல்டு' மெட்ரிக்பள்ளியின் வித்தியாசமான முயற்சி: தினமலர் 'பட்டம்' இதழை ஆர்வத்துடன் வாசித்த மாணவர்கள்

வாசிப்பில் 45 நிமிடங்கள் மூழ்கிய 1,427 மாணவர்கள் 'ஸ்பிரிபீல்டு' மெட்ரிக்பள்ளியின் வித்தியாசமான முயற்சி: தினமலர் 'பட்டம்' இதழை ஆர்வத்துடன் வாசித்த மாணவர்கள்


UPDATED : நவ 14, 2026 01:49 PM

ADDED : நவ 14, 2026 01:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 01:49 PM ADDED : நவ 14, 2026 01:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பள்ளி மாணவ மாணவியரிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், கே.கே.நகரில் உள்ள ஸ்பிரிபீல்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த, மாபெரும் வாசிப்பு நிகழ்வில், 45 நிமிடங்களில், மாணவ மாணவியர் உட்பட 1,427 பேர், நாளிதழ் மற்றும் புத்தக வாசிப்பில் முழ்கினர். நிகழ்வில், 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழை மாணவர்கள் ஆர்வமுடன் வாசித்தனர்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கே.கே.நகரில் உள்ள ஸ்பிரிபீல்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 'ஒரே நேரத்தில் அதிகமான பள்ளி மாணவர்கள் நாளிதழ் வாசித்தல்' என்ற தலைப்பில், மாபெரும் கூட்டு வாசிப்பு நிகழ்வு இன்று நடந்தது.

இந்நிகழ்வில், மழலையர் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும், 1,295 மாணவ மாணவியர் பங்கேற்றனர். இவர்களுடன் பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் 62 பேர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் 70 பேர் என, 1,427 பேர் ஒரே நேரத்தில் வாசிக்கும் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

இன்று காலை 9:00 மணிக்கு தொடங்கிய வாசிப்பு நிகழ்வு, 45 நிமிடங்கள் நடந்தது. முதலில், 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மாணவர்களின் கைகளுக்குச் சென்றது. அதில் இடம்பெற்றிருந்த செய்திகள், தகவல்கள், படங்கள் ஆகியவற்றை ஆர்வத்துடன் வாசித்தனர்.

தொடர்ந்து ஆங்கில நுால்கள் மற்றும் புத்தகங்களை வாசித்து நிகழ்வை நிறைவு செய்தனர்.

வழக்கமாக நண்பர்களுடன் பேசிக் கொண்டும், மொபைல் போன்களில் நேரத்தைச் செலவிட்டும் பழகிய மாணவர்களுக்கு, இந்த 45 நிமிடங்கள் முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக அமைந்தது.

ஒரே நேரத்தில் பலரும் வாசிப்பில் ஈடுபட்டதால், பள்ளி வளாகமே வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இடமாக மாறியது.

இச்சாதனை முயற்சியை, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நடுவர் அருண்குமார் பார்வையிட்டு, விதிமுறைகளின்படி ஆய்வு செய்து மதிப்பீடு செய்தார்.

'தினமும் 20 நிமிடம் வாசிப்போம்'
நிகழ்வில், பள்ளியின் முதன்மை முதல்வர் வீ.சங்கர்லால் பேசியதாவது:


மாணவர்களுக்கு வாசிப்புத் திறன் மிக முக்கியமான ஆயுதம். தற்போது, மொபைல் போன்களின் பயன்பாட்டால் வாசிப்புத் திறன் படிப்படியாகக் குறைந்து வருகிறது. மாணவர்கள் தினமும் குறைந்தது, 20 நிமிடங்களாவது ஏதாவது ஒரு புத்தகத்தை வாசிக்க வேண்டும்.

இதனால் எழுத்து, மொழித்திறன் வளர்வதுடன், பல நல்ல அனுபவங்களையும் பெற முடியும். பாடப்புத்தகங்களைத் தவிர மற்ற நுால்களையும் வாசிக்க பெற்றோர் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

'பட்டம் இதழுக்கு நன்றி!'
பள்ளி முதல்வர் சுதா கூறியதாவது:


குழந்தைகள் தினத்தில் இதுபோன்ற முயற்சியில் மாணவர்கள் பங்கேற்றது அவர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். இன்றைய நிகழ்வுடன் நின்றுவிடாமல், வாழ்நாள் முழுதும் வாசிப்புப் பழக்கத்தைத் தொடர வேண்டும்.
நாளிதழ்கள் உட்பட அனைத்து வகையான நுால்களையும் வாசிக்க வேண்டும்.

புத்தக வாசிப்பு மன அழுத்தத்தைக் குறைத்து, நேர்மறை சிந்தனையை அதிகரிக்கும். தினமும் 20 நிமிடங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், அடுத்த தலைமுறையினர் நல்ல முன்னேற்றம் அடைவர். இந்த சாதனை முயற்சிக்கு உறுதுணையாக இருந்த, 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிவான, 'பட்டம்' இதழுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us