தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.எஸ்.எஸ்., மாணவியருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு

என்.எஸ்.எஸ்., மாணவியருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு

என்.எஸ்.எஸ்., மாணவியருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு


UPDATED : அக் 02, 2026 06:03 PM

ADDED : அக் 02, 2026 06:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 06:03 PM ADDED : அக் 02, 2026 06:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லுாரி வளாகத்தில், நாட்டு நலப்பணி திட்ட மாணவியருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொ) சாந்தி தலைமை வகித்தார்.

கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் லாவண்யா, உயிர் வேதியல் துறை இணை பேராசிரியர் கனகலட்சுமி, தொண்டு நிறுவன நிறுவனர்கள் முகுந்தன், சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் ஹேமா பாண்டே பேசியதாவது:


மாணவியர், பட்டப்படிப்பு மட்டும் படித்தால் மட்டும் போதாது. வேலைவாய்ப்புள்ள துறைகளில் உயர் கல்வியை பயின்று பணிக்கு செல்வதன் மூலம், மாணவியர், தங்களது பொருளாதார சுதந்திரத்தை பெறுகின்றனர். எந்த பணிக்கு செல்ல வேண்டும் என்ற இலக்குடன் ஆர்வத்தை வளர்த்து கொள்ள வேண்டும். நேர்முக தேர்வுக்கு இயல்பான மனநிலையில் செல்ல வேண்டும்.

நேர்முகத்தேர்வை முன்னெடுக்கும் அலுவலரின் கேள்விக்கு எதிர்மறையான பதில்களை பதிவு செய்யக்கூடாது. சாதாரணமான ஆடைகள் அணிந்தால் போதும். புதிய காலணி, புதிய வாசனை திரவியங்களை பயன்படுத்த வேண்டாம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

'சீருடை பணியில் வேலை வாய்ப்புகள்' என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் சுரேஷ் பேசுகையில், “இந்திய ராணுவ பணியில் பெண்களுக்கு, 50 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ராணுவத்தில் சேர, உடல் தகுதியும், ஆரோக்கியமும் தேவை. காலை உணவை தவிர்க்காமல், கட்டாயம் உண்ண வேண்டும்,” என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us