எஸ்.என்.எஸ்., அகாடமியில் ஸ்பெக்ட்ரம் 2026 ஏ.ஐ., கண்காட்சி
எஸ்.என்.எஸ்., அகாடமியில் ஸ்பெக்ட்ரம் 2026 ஏ.ஐ., கண்காட்சி
UPDATED : பிப் 22, 2026 11:27 AM
ADDED : பிப் 22, 2026 11:29 AM
அ நிறம் | அளவு
கோவை:
எஸ்.என்.எஸ்., அகாடமியில், ஸ்பெக்ட்ரம் 2026 - ஏ.ஐ., கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சியில், மாணவர்கள் நிஜ வாழ்க்கைச் சிக்கல்களுக்குப் புதுமையான தீர்வுகள் கண்டறிந்து காட்சிப்படுத்தினர்.
இ.எச்.எஸ்., மற்றும் சஸ்டெய்னபிளிட்டி மண்டலத் தலைவர் சசிகலா சாம் பேசுகையில், “சமூகத்துக்கு பயன்படும் எதிர்கால நோக்குடைய தீர்வுகளை மாணவர்கள் முன்வைத்தனர். இது பாராட்டுக்குரியது. ஏ.ஐ., எதிர்காலத்தில் பல்வேறு விஷயங்களில் ஈடுபடுத்தப்படும். மாணவர்கள் அதில் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்,” என்றார்.
பள்ளி முதல்வர் ஸ்ரீவித்யா பிரின்ஸ் வரவேற்றார். எஸ்.என்.எஸ்., குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார், தலைமை வகித்தார். தாளாளர் ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
