சோனா கல்லுாரி சோனாஸ்பீட், ஸ்டெப்பர் மோட்டார் இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி., எப் 16 ராக்கெட்டுக்கு வழங்கல்
சோனா கல்லுாரி சோனாஸ்பீட், ஸ்டெப்பர் மோட்டார் இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி., எப் 16 ராக்கெட்டுக்கு வழங்கல்
UPDATED : ஆக 02, 2025 12:00 AM
ADDED : ஆக 02, 2025 08:22 AM
சேலம்:
சேலம் சோனா தொழில்நுட்ப கல்லுாரி, முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான சோனாஸ்பீட்(சோனா ஸ்பெஷல் பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் எலக்ட்ரிக் டிரைவ்ஸ்), நாசா -இஸ்ரோ செயற்கை துளை ரேடார்(NISAR) பணிக்கு, சிம்ப்ளக்ஸ் நிரந்தர காந்த ஸ்டெப்பர் மோட்டாரை உருவாக்கி, இஸ்ரோவுக்கு வழங்கியது.
இது கடந்த ஜூலை, 30 அன்று, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி., எப்., 16ல் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இதுகுறித்து சோனா கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், இஸ்ரோ முன்னாள் உறுப்பினர், சோனாஸ்பீட் தலைவர் கண்ணன் கூறியதாவது:
இஸ்ரோ பணிக்கு பங்களிக்க, நாட்டின் எதிர்கால விண்வெளி முயற்சிகளை ஆதரிக்க, அர்ப்பணிப்புடன் உள்ளோம். நாசா -இஸ்ரோ செயற்கை துளை ரேடார் பணியில், இந்த வெற்றிகர ஒருங்கிணைப்பு, இந்தியாவில் உள்ள கல்வி நிறுவன ஆய்வகங்கள், குறிப்பாக பெருநகரங்கள் அல்லாத பகுதிகளில் இருந்து,- உலகளாவிய விண்வெளி ஆய்வின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது. சோனாஸ்பீட் பங்களிப்பு, இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, உயர் துல்லிய விண்வெளி பொறியியலில் உள்நாட்டில் வளர்க்கப்படும் கண்டுபிடிப்புகளுக்கு கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.