UPDATED : அக் 17, 2024 12:00 AM
ADDED : அக் 17, 2024 06:11 PM

சென்னை:
டில்லியில் அடுத்தாண்டு, மே 7 - 9 தேதிகளில் நடக்க உள்ள விண்வெளி ஆய்வு மாநாட்டுக்கு, ஆய்வுக் கட்டுரைகள் அனுப்பலாம் என, யு.ஜி.சி., செயலர் மனீஷ் ஜோஷி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு, அதன் உறுப்பு நிறுவனங்களுடன் இணைந்து, விண்வெளி குறித்த சர்வதேச மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அடுத்தாண்டு மே 7 - 9 தேதிகளில், மாநாடு நடக்க உள்ளது.
இதில், இன்ஜினியர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்று விவாதிக்கவும், கட்டுரைகள் வழங்கவும் முன்வரலாம்.
சர்வதேச விண்வெளி சமூகத்துடன் இணையும் வகையில், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஆய்வில், இந்தியாவின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில், இந்த நிகழ்வு தனித்துவமான தளத்தை வழங்கும். இதில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புவோர், கட்டுரை சுருக்கத்தை வழங்கலாம்.
இதுகுறித்த மேலும் விபரங்களை, இஸ்ரோ தலைமையகத்தின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் புத்தாக்க இயக்குனரகத்தின் துணை இயக்குனர் முகமது சாதிக்கை, 88931 07176 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.