UPDATED : ஜூலை 15, 2026 09:07 PM
ADDED : ஜூலை 15, 2026 09:10 PM
கரூர்:
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், உயர் கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், கலெக்டர் முத்துக்குமரன் தலைமையில் நடந்தது.
அப்போது அவர் பேசியதாவது:
மாணவ, மாணவியர் உயர்கல்வியில் சேரும் வகையிலும், இடைநிற்றலை தவிர்க்கும் வகையிலும், துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் உரிய வழிகாட்டுதலுடன் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும்.
உயர்கல்விக்கு விண்ணப்பித்த மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொண்டு, கல்லுாரியில் சேர்க்கை நடக்கும் வரை கண்காணித்தும், துணைத்தேர்வு எழுதிய மாணவர்களை வரும் அக்., 31 வரை கண்காணித்து உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.
தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணை தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனரா என அறிந்து, துணை தேர்விலும் தேர்ச்சி பெறாத மாணவர்களை ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், துணை மருத்துவ படிப்புகளுக்கான கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், உயர்கல்வியில் மாணவர்களுக்கு ஏதேனும் உதவி பெற, மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு, 95665 66727 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
முதன்மை கல்வி அலுவலர் ராஜு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பிரகாஷ், மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி, மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் வசந்தகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
