sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சிறப்பு மதிப்பெண் உத்தரவும் குளறுபடி; பகுதிநேர ஆசிரியர்கள் மீண்டும் போர்க்கொடி

/

சிறப்பு மதிப்பெண் உத்தரவும் குளறுபடி; பகுதிநேர ஆசிரியர்கள் மீண்டும் போர்க்கொடி

சிறப்பு மதிப்பெண் உத்தரவும் குளறுபடி; பகுதிநேர ஆசிரியர்கள் மீண்டும் போர்க்கொடி

சிறப்பு மதிப்பெண் உத்தரவும் குளறுபடி; பகுதிநேர ஆசிரியர்கள் மீண்டும் போர்க்கொடி


UPDATED : மார் 10, 2026 02:16 PM

ADDED : மார் 10, 2026 02:19 PM

Google News

UPDATED : மார் 10, 2026 02:16 PM ADDED : மார் 10, 2026 02:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
'தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல், பணி நியமனங்களில் சலுகை அளிக்கும் வகையில் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்ற உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. அதிலும் குளறுபடி உள்ளதால் பணி நிரந்தரமே ஒரே தீர்வு என,' பகுதிநேர ஆசிரியர்கள் மீண்டும் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்க 2012ல் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 14 ஆண்டுகளுக்கு பின் தற்போது 11,773 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களை பணி நிரந்தரம் செய்வோம் என தி.மு.க., அ.தி.மு.க., என இரண்டு கட்சிகளும் மாறி மாறி தேர்தல் வாக்குறுதிகள் அளித்து வருகின்றன.

கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தும் போதெல்லாம் சம்பளத்தை மட்டும் உயர்த்தி அரசு சரிகட்டி வந்தது. கடைசியாக ஜனவரியில் நடந்த போராட்டம் விளைவாக, 'காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடந்தால் அதில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அது தொடர்பான அரசாணை தற்போது வெளியிடப்பட்டது. அதில் 3843 உடற்கல்வி, 3721 ஓவியம், 1584 தையல், 329 இசை பாடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் 15 மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2033 கணினி அறிவியல், 192 வாழ்க்கை கல்வி, 49 கட்டடக் கலை, 22 தோட்டக் கலை பாட ஆசிரியர் விபரம் அரசாணையில் இடம் பெறவில்லை. காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை விபரமும் தெரிவிக்கவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:


தொகுப்பூதியத்தில் பணியாற்றியவர்கள் நிரந்தரம் செய்யப்பட்ட முன்னுதாரணங்கள் தமிழகத்தில் உள்ளன. 2003ல் 'எஸ்மா' சட்டத்தில் பணிநீக்கம் செய்தவர்களுக்கு பதில் 11 ஆயிரம் பேர் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். சிறப்பு தேர்வு நடத்தி அவர்கள் நிரந்தரம் செய்யப்பட்டனர்.

அது போல் 15 ஆண்டுகளாக பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் சிறப்பு தேர்வு வைத்து நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் தி.மு.க.,வின் 5 ஆண்டு ஆட்சியில் ஒரு நியமனமும் மேற்கொள்ளவில்லை. காலிப் பணியிடங்களே அறிவிக்காமல் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்ற அறிவிப்பு எதற்காக.

பணி நிரந்தரம் வாக்குறுதியை மறக்கடிக்கும் முயற்சியை தி.மு.க., கையாள்கிறது. பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்றார்.







      Dinamalar
      Follow us