தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு பயிற்சி வகுப்பு பெயரளவில் நடக்கிறதா?

ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு பயிற்சி வகுப்பு பெயரளவில் நடக்கிறதா?

ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு பயிற்சி வகுப்பு பெயரளவில் நடக்கிறதா?


UPDATED : நவ 12, 2026 02:20 PM

ADDED : நவ 12, 2026 02:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 02:20 PM ADDED : நவ 12, 2026 02:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரையில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு 'டெட்' தேர்வுக்கான பயிற்சி பெயரளவில் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் 2028க்குள் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அடுத்தமாதம் இரண்டாவது சிறப்பு 'டெட்' தேர்வு நடக்கிறது. இதற்காக மாநில ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சிக்கு கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி நவம்பர் முதல் வாரம் துவங்கி டிசம்பர் 3 வது வாரம் வரை சனி, ஞாயிறுகளில் உளவியல், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

மதுரையில் விரகனுார் தெரசா ஆசிரியர் பயிற்சி மையத்தில் பயிற்சி வகுப்பு நடக்கிறது. இது பெயரளவில் நடப்பதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

அவர்கள் கூறுகையில், மாவட்டத்தில் இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியுள்ளது. இந்த பயிற்சி வகுப்பு அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் பயிற்சி குறித்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ('டயட்) சார்பில் போதிய அறிவிப்பு செய்யவில்லை.

முதல் வாரத்தில் உளவியல் பாட பயிற்சி வகுப்பு காலை 10:00 முதல் 5:00 மணி வரை நடந்தது. இதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டது. வகுப்பு தாமதமாக துவங்கியது உட்பட சில குறைகள் உள்ளன. இவற்றை எஸ்.சி.இ.ஆர்.டி., சரி செய்ய வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us