தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி


UPDATED : பிப் 07, 2026 09:42 AM

ADDED : பிப் 07, 2026 09:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2026 09:42 AM ADDED : பிப் 07, 2026 09:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு:
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வரும் 18, 20 ஆகிய தேதிகளில், பேச்சு போட்டிகள் நடக்கின்றன.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, வரும் 18ம் தேதியும், ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி, வரும் 20ம் தேதி காலை 9:00 மணியளவிலும், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரியில் பேச்சுப் போட்டி நடக்கிறது.

கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில், கல்லுாரிக்கு இரண்டு பேர் வீதம், அந்தந்த கல்லுாரிகளின் முதல்வரே தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில், ஒரு பள்ளிக்கு ஒருவர் வீதம், பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us