தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'தினமலர்' பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் பெரும் எதிர்பார்ப்பு

'தினமலர்' பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் பெரும் எதிர்பார்ப்பு

'தினமலர்' பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் பெரும் எதிர்பார்ப்பு


UPDATED : பிப் 07, 2026 10:10 AM

ADDED : பிப் 07, 2026 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2026 10:10 AM ADDED : பிப் 07, 2026 10:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
'தினமலர்' பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில், கே.பி.ஆர்., கல்லுாரியும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியும் மோதுகின்றன. வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமம் சார்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான 'பிரீமியர் லீக் கிரிக்கெட்' போட்டி, கடந்த 2ம் தேதி துவங்கியது. இந்த 'டி-20' போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. நான்கு கல்லுாரி மைதானங்களில் 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடந்தன.

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லுாரி மைதானத்தில், நேற்று முன்தினம் நடந்த காலிறுதி போட்டிகளை அடுத்து, நேற்று அரையிறுதி போட்டிகள் நடந்தன.

முதல் அரையிறுதியில் கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியும், வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லுாரியும் மோதின.

கே.பி.ஆர்., அணியினர் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 137 ரன் எடுத்தனர். வி.எல்.பி., அணியினரோ 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ரன் எடுத்தனர்.

கே.பி.ஆர்., அணியினர் 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். நான்கு ஓவரில் மூன்று விக்கெட் வீழ்த்திய கே.பி.ஆர்., அணி வீரர் பிரவீன் நிவாஸிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இரண்டாம் அரையிறுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியும், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியும் மோதின. பி.எஸ்.ஜி., அணியினர் 20 ஓவரில் மூன்று விக்கெட்டுக்கு 136 ரன் எடுத்தனர். ராமகிருஷ்ணா அணியினரோ 16.4 ஓவரில் இரு விக்கெட் இழப்புக்கு 137 ரன் இலக்கை அடைந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

70 ரன் விளாசிய ராமகிருஷ்ணா வீரர் அஜித்தேஷிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. வரும் 9ம் தேதி மூன்று, நான்காம் இடத்துக்கான போட்டியும், இறுதிப்போட்டியும், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us