UPDATED : அக் 24, 2025 10:51 AM
ADDED : அக் 24, 2025 10:52 AM

சென்னை:
மத்திய பணியாளர் தேர்வாணையமான எஸ்.எஸ்.சி., பல்வேறு துறை தேர்வுகளை நடத்தி, மத்திய அரசுக்கு பணியாளர்களை தேர்வு செய்கிறது. இந்நிலையில், ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பங்களை பெற்றுள்ள ஒருங்கிணைந்த மேல்நிலைத் தேர்வு உள்ளிட்டவற்றின் தேர்வு தேதிகளை தற்போது மாற்றி உள்ளது.
அதற்கேற்ப, தேர்வர்கள் தங்களின் தேர்வு நகரம், ஷிப்ட் உள்ளிட்டவற்றை மாற்றிக்கொள்ளும் வகையில், 'செல்ப் ஸ்லாட்' எனும் சுய பதிவு வசதியை, 'https://ssc.gov.in/' இணையதளத்தில் ஏற்படுத்தி உள்ளது.
புதிய பட்டியலின்படி, ஒருங்கிணைந்த மேல்நிலைத் தேர்வுகள், நவ., 12ல் நடக்க உள்ளன. டில்லி கான்ஸ்டபிள் உள்ளிட்ட தேர்வுகளின் தேதிகளும் மாற்றப்பட்டுள்ளன. புதிய ஸ்லாட்டில், வரும் 28ம் தேதி வரை, 'மை அப்ளிகேஷன்' பகுதிக்கு சென்று, நகரம், ஷிப்ட் உள்ளிட்ட விபரங்களில் மாற்றம் செய்யலாம்.

