UPDATED : அக் 01, 2024 12:00 AM
ADDED : அக் 01, 2024 10:47 AM
மதுரை:
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் ஸ்டார்ட்-அப் திருவிழா 2024 மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அரசு செயலாளார் அர்ச்சனா பட்நாயக் தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதி மற்றும் டான்சீட் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு அனுமதி ஆணைகளை வழங்கினார்.
இதில் நடைபெற்ற ஸ்டார்ட்-அப் கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்திருவிழாவில் முக்கிய பேச்சுகள், உரையாடல்கள், குழு விவாதங்கள் ஆகியன இடம்பெற்றன.
நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, ஸ்டார்ட்-அப் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் மற்றும் மதுரை மண்டல சிஐஐ துணைத்தலைவர் அஸ்வின் தேசாய் அகியோர் கலந்து கொண்டனர்.