கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு ரூ.500 கோடி வழங்கவில்லை
கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு ரூ.500 கோடி வழங்கவில்லை
UPDATED : அக் 01, 2024 12:00 AM
ADDED : அக் 01, 2024 10:49 AM

தேனி:
அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கடந்தாண்டு கல்விக்கட்டணம் ரூ.500 கோடியை தமிழக அரசு வழங்கவில்லை என தனியார் பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறினார்.
தேனியில் நர்சரி, பிரைமரி மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ.,பள்ளிகள் சங்க மாவட்ட கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற நந்தகுமார் கூறியதாவது:
எந்த பள்ளியிலும் டி.சி., இல்லாமல் மாணவர்களை சேர்க்க கூடாது. பிற பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களிடம் டி.சி., நோ டியூ சான்றிதழ் வாங்கிய பின் தான் பள்ளிகளில் சேர்க்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நர்சரி, பிரைமரி பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தவும், அங்கீகாரம் பெற்று 10ஆண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். பள்ளிகளுக்கு டி.டி.சி.பி., அனுமதி வாங்குவதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். நர்சரி, பிரைமரி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மாநில, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி, தனியார் பள்ளிகளுக்கு சொத்துவரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி சட்டத்தில் 25 சதவீத மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படுகிறது. அவர்களுக்கான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்குகிறது. சென்ற ஆண்டிற்கான கல்வி கட்டணம் ரூ.500 கோடியை விடுவிக்க கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது. இதுவரை பணம் வழங்கவில்லை. இதனால் தனியார் பள்ளிகள் சம்பளம் வழங்கமாலும், பராமரிப்பு மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது என்றார்.