தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில கல்விக்கொள்கையால் உயர்கல்வி தரம் பாதிக்கப்படும்

மாநில கல்விக்கொள்கையால் உயர்கல்வி தரம் பாதிக்கப்படும்

மாநில கல்விக்கொள்கையால் உயர்கல்வி தரம் பாதிக்கப்படும்


UPDATED : ஆக 11, 2025 12:00 AM

ADDED : ஆக 11, 2025 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2025 12:00 AM ADDED : ஆக 11, 2025 11:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
மாநில கல்விக்கொள்கையால் உயர்கல்வி தரம் பாதிக்கப்படும் என பாலகுருசாமி கூறியுள்ளார்.

தமிழக அரசின் மாநில கல்வி கொள்கை குறித்து, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வெளியிட்ட அறிக்கை:


ஜே.இ.இ., நீட் போன்ற தேசிய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, தமிழக மாணவர்களை தயார்படுத்தும் நோக்கத்துடன், பிளஸ் 1 பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.

தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே, போட்டி தேர்வுகளில் தமிழக மாணவர்களின் செயல்திறன் கணிசமாக மேம்பட்டது.

இந்நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்டால், பெரும்பாலான பள்ளிகள் நேரடியாக பிளஸ் 2 வகுப்பு பாடங்களை கற்பிக்க தொடங்கிவிடும். இதற்கு காரணம், பொறியியல் மற்றும் பிற பட்டப்படிப்பு சேர்க்கைகள், பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன.

பிளஸ் 1 பொதுத் தேர்வை நீக்குவது நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களின் வாய்ப்புகளை பாதிப்பது மட்டுமல்லாமல், ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள தமிழக உயர்கல்வி தரத்தையும், கடுமையாக பாதிக்கும்.

இவ்வாறு, பாலகுருசாமி கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us