UPDATED : ஜூன் 11, 2025 12:00 AM
ADDED : ஜூன் 11, 2025 08:21 AM
மேட்டுப்பாளையம்:
தமிழக அரசு நடத்திய மாநில அளவிலான கட்டுரை போட்டியில், சிறுமுகை விஜயலட்சுமி பள்ளியை சேர்ந்த மாணவர் இரண்டாம் இடம் பெற்றார்.
கடந்த மே மாதம் தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்கான தமிழ் கட்டுரை போட்டியை நடத்தியது. இதில் சிறுமுகை விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த, பிளஸ் 2 மாணவன் தரணீஷ், கோவை மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற்றார். பின்பு மதுரையில் உலக தமிழ் சங்கம் சார்பில் மாநில அளவில், தமிழ் கட்டுரைப் போட்டி நடந்தது. இதில் இப்பள்ளியை சேர்ந்த இந்த மாணவன், இரண்டாம் இடத்தை பெற்றார்.
இந்த மாணவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், செம்மொழி விழாவில் ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கி பாராட்டினார். இந்த மாணவரை பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

