எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான தேர்வு முறையை தீர்மானிப்பதில் மாநில அரசு பங்கு: ஸ்டாலின்
எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான தேர்வு முறையை தீர்மானிப்பதில் மாநில அரசு பங்கு: ஸ்டாலின்
UPDATED : ஜூன் 14, 2024 12:00 AM
ADDED : ஜூன் 14, 2024 09:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான தேர்வு முறையை தீர்மானிப்பதில் மாநில அரசு பங்கு வகிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதில் அவர் பதிவிட்டு இருப்பதாவது:
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து என்பது மத்திய அரசின் திறமையின்மையை காட்டுகிறது.முக்கிய பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப அனுமதிக்க கூடாது.
நீட் விவகாரத்தில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பது தான் இப்பிரச்சனைக்கு ஒரே தீர்வாக இருக்கும். நீட்தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு நழுவ பார்க்கிறது. என முதல்வர் சமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

