தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ மாணவர்களுக்கு ஊக்க தொகை சாய் சரவணன்குமார் கோரிக்கை

மருத்துவ மாணவர்களுக்கு ஊக்க தொகை சாய் சரவணன்குமார் கோரிக்கை

மருத்துவ மாணவர்களுக்கு ஊக்க தொகை சாய் சரவணன்குமார் கோரிக்கை


UPDATED : ஆக 29, 2026 01:28 PM

ADDED : ஆக 29, 2026 01:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2026 01:28 PM ADDED : ஆக 29, 2026 01:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
மானிய கோரிக்கை மீது சாய் சரவணன் குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது:

செல்லிப்பட்டு சங்கராரபரணி ஆற்றில் படுகையணையை சீரமைக்க வேண்டும். தனியார் மருத்துவ கல்லுாரிகளில் படிக்கும் எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம், எம்.டி., மாணவர்களுக்கு ரூ. 40 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பிம்ஸ் மருத்துவக் கல்லுாரி தவிர மற்ற கல்லுாரிகள் வழங்குவதில்லை.

அப்போது, குறுக்கிட்ட சபாநாயகர் அன்பழகன், புதுச்சேரியில் இயங்கும் தனியார் மருத்துவ கல்லுாரிகள் ஊக்கத் தொகை வழங்குவது தொடர்பாக துறை செயலர் மற்றும் தலைமை செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து முதல்வர் மீண்டும் பேசவேண்டும் என்றார்.

தொடர்ந்து, சாய் சரவணன் குமார், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கும் நிதியில் ரூ. 50 கோடியை தனியாக ஒதுக்கி வீடு மற்றும் இடம் வாங்குவதற்கு ரூ. 10 லட்சம் வழங்கிட வேண்டும்.

திருபுவனை பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மதகடிப்பட்டில் விவசாய பண்ணையை சீரமைக்க வேண்டும். திருவண்டார்கோவிலில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதான துணை மின் நிலையத்தை சீரமைக்க வேண்டும்' என்றார்.

சபாநாயகர் ஆறுமுகம், 'எல்லா துணை மின் நிலைங்களும் மோசமாக உள்ளன. மின்துறை அமைச்சர் கவனம் செலுத்தி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us