அரசு பள்ளி வளாகத்தில் 3 மாணவர்களை கடித்த தெரு நாய்
அரசு பள்ளி வளாகத்தில் 3 மாணவர்களை கடித்த தெரு நாய்
UPDATED : ஜூன் 29, 2024 12:00 AM
ADDED : ஜூன் 29, 2024 10:33 AM
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இதில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். நேற்று மதியம், பள்ளி வளாகத்தில் விளையாடிய ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் மூன்று பேரை, பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிந்த தெரு நாய் துரத்தியது.
மூன்று பேரையும் கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் நாய் கடித்தது. மூன்று மாணவர்களையும் ஆசிரியர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடையே பீதி ஏற்பட்டு உள்ளது. பள்ளி வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
அதேபோல், சிங்கபெருமாள் கோவில் அடுத்த கொளத்துார் கிராமத்தில் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற வெள்ளாட்டு குட்டிகளை தெரு நாய்கள் கடித்து குதறியதில், சின்ராஜ் என்பவரின்மூன்று ஆட்டுக்குட்டிகள் இறந்தன.