UPDATED : டிச 13, 2024 12:00 AM
ADDED : டிச 13, 2024 10:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் :
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
அதில், கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அளித்த மனு:
கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தாததால் கற்றல் பணி பாதிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மீது மாணவர்கள் தைரியமாக புகார் கூறி, மனு அனுப்பிய விவகாரம் குறித்து, அந்த பள்ளியில் கல்வி அதிகாரி இன்று விசாரணை நடத்த உள்ளார்.