தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ நாளை மாணவர் குறைதீர் கூட்டம்

நாளை மாணவர் குறைதீர் கூட்டம்

நாளை மாணவர் குறைதீர் கூட்டம்


UPDATED : ஜூன் 04, 2025 12:00 AM

ADDED : ஜூன் 04, 2025 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 04, 2025 12:00 AM ADDED : ஜூன் 04, 2025 10:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
இந்தாண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம், கல்லுாரி கனவு திட்டங்களின் கீழ் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நாளை(ஜூன் 5) குறைதீர் கூட்டம் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.

உயர்கல்வி பயிலுதல், துணைத் தேர்வு தொடர்பாக மாணவர், பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உயர்கல்வியில் சேர்த்தல், கல்வி உதவித்தொகைக்கு வழிகாட்டுதல், அவர்களின் பிற கோரிக்கைகள் குறித்து பயன் பெறும் வகையில் இக்கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெறும். அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் பயின்ற மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.

இதில் பங்கேற்க இயலாத மாணவர்கள் ஆலோசனை பெற முதன்மை கல்வி அலுவலகத்தில் அக்.31 வரை செயல்படும் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை ( 72006 47475) அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us