தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் விடுதிகள் மூடல் அதிகாரிகளுக்கு 'டோஸ்'

மாணவர்கள் விடுதிகள் மூடல் அதிகாரிகளுக்கு 'டோஸ்'

மாணவர்கள் விடுதிகள் மூடல் அதிகாரிகளுக்கு 'டோஸ்'


UPDATED : அக் 24, 2026 02:29 PM

ADDED : அக் 24, 2026 02:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 02:29 PM ADDED : அக் 24, 2026 02:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர்கள் தங்கும் விடுதி மூடப்படுவது குறித்து அதிகாரிகளிடம், அமைச்சர் கடிந்து கொண்டார்.

ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகளில் சரியான பராமரிப்பு இல்லை என்றும், சில விடுதிகள் மூடப்படுவதாகவும், துறை அமைச்சர் ராஜவேலுவிடம் பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர் 'விடுதிகள் இருக்கும் இடம், அரசினுடையதா, இல்லை தனியாரா, என பார்க்க வேண்டும்.

நீங்கள் விடுதியை மூடிவிட்டு வந்தால் என் அர்த்தம். மாணவர்கள் தங்க சரியான சூழல் உள்ளதா எனவும், அவர்களுக்கு உணவு, வசதிகள் செய்து விடுதியை திறக்க என்ன வழி என பாருங்கள்' என கடுமையாக கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us