தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் பாதுகாப்பு முக்கியம்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

மாணவர்கள் பாதுகாப்பு முக்கியம்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

மாணவர்கள் பாதுகாப்பு முக்கியம்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை


UPDATED : அக் 06, 2026 01:35 PM

ADDED : அக் 06, 2026 01:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 01:35 PM ADDED : அக் 06, 2026 01:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்:
'பள்ளிகளில் கழிவுநீர், கழிவுகள், கூரைகள், மொட்டைமாடிகள் அல்லது ஆபத்தான பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கூறியதாவது:

பள்ளி கல்வித்துறையின் செயலரின் அறிவுறுத்தல்படி, மாணவர்கள் உடல்நலம் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி வளாகங்களிலும், கழிவுநீர், கழிவுகள் தேங்குதல், தேவையற்ற பொருட்களை குவித்து வைத்தல் மற்றும் மழை நீர் தேங்குதல் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கும் வகையில், தொடர் துாய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

பருவகால மாற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து, குறிப்பாக, டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களில் இருந்து பாதுகாத்து கொள்ள தேவையான அறிவுரைகளை, மாணவர்களுக்கு, தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.

மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால், காலதாமதம் இல்லாமல், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று, மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தில் நீர் தேக்கம், கழிவு குவியல் அல்லது கொசு உற்பத்திக்கான வாய்ப்பு இருந்தால், அதை உடனடியாக துாய்மைப்படுத்த, தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபத்தான துாய்மை பணிகளில் மாணவர்களை நேரடியாக ஈடுபடுத்தக் கூடாது. குறிப்பாக, கழிவு நீர், கழிவுகள், மொட்டை மாடியில் மற்றும் ஆபத்தான பகுதிகளை மாணவர்களை சுத்தம் செய்ய விடக்கூடாது என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us