UPDATED : மார் 13, 2026 01:29 PM
ADDED : மார் 13, 2026 01:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:
தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சி வகுப்பு நடந்தது.
கல்லூரி முதல்வர் வெற்றிவேல் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார்.
ஆன்சிட் நிறுவன நிர்வாகிகள் கார்த்திக், சசிதரன் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்கள், திறன் மேம்பாட்டின் அவசியம் பற்றி விளக்கினர்.
'நான் முதல்வன்' திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவபெருமான் நன்றி கூறினார். பயிற்சி வகுப்பில் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

