தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எளிதில் தேர்ச்சி பெறலாம் மாணவர்கள் நம்பிக்கை

எளிதில் தேர்ச்சி பெறலாம் மாணவர்கள் நம்பிக்கை

எளிதில் தேர்ச்சி பெறலாம் மாணவர்கள் நம்பிக்கை


UPDATED : மார் 06, 2026 11:09 AM

ADDED : மார் 06, 2026 11:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 06, 2026 11:09 AM ADDED : மார் 06, 2026 11:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்:
ஆங்கிலத் தேர்வில் ஐந்து மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

அன்னுார் வட்டாரத்தில், அன்னுார் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலை, சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலை, கே.ஜி., மெட்ரிக் பள்ளிகளில், பிளஸ் 2 தேர்வு நடந்தது. 90 மதிப்பெண்களுக்கு ஆங்கில பாடத்திற்கு தேர்வு நடந்தது.

தேர்வு குறித்து மாணவர்கள் கூறியதாவது:
தினகர், அரசு மேல்நிலைப் பள்ளி, அன்னுார்:

ஆங்கிலத் தேர்வில், 90 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஐந்து மதிப்பெண் பகுதியில் 14 கேள்விகள் கேட்கப்பட்டு, ஏழு கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. இதில் நீதி போதனை பாடத்துக்கான தேவை குறித்த கேள்வி, ஜி.பி.ஆர்.எஸ்., குறித்த கேள்வி என சில கேள்விகள் கடினமாக இருந்தன.

புகழேந்தி, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அரசு மேல்நிலைப் பள்ளி, காட்டம்பட்டி:
ஆங்கிலத் தேர்வில் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் மற்றும் மூன்று மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன.

வகுப்பறையில் தெரிவிக்கப்பட்ட பல கேள்விகள் தேர்வில் வந்திருந்தன. எளிதில் தேர்ச்சி பெறலாம். ஐந்து மதிப்பெண் கேள்விகளுக்கு போதிய நேரம் இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us